மணமகளின் 12ம் வகுப்பு மதிப்பெண்ணில் குறை!! திருமணத்தை நிறுத்த மணமகன் கூறிய வினோத காரணம்!!

மணமகள் 12ம் வகுப்பில் மோசமான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக கூறி, நடைபெற இருந்த திருமணத்தை மணமகன் தடுத்து நிறுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தர பிரதேச மாநிலத்தின் கன்னோஜ் மாவட்டம், திர்வா கோட்வாலி பகுதியில் மணமகள் சோனி மற்றும் பகன்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்சங்கரின் மகன் சோனு ஆகியோருக்கு இடையே திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் மணமகன் சோனு திடீரென மணமகளின் 12ம் வகுப்பு மதிப்பெண் மோசமாக இருப்பதாக கூறி நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் வரதட்சணைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மணமகன் திருமணத்தை நிறுத்தியதாக மணமகளின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்

மணமகளின் வீட்டார் மணமகனின் உறவினர்களை சமாதானம் செய்ய முயன்றும், மணமகளின் 12 வகுப்பு மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி மணமகனின் வீட்டார் உறவை முறிக்க முயன்ற நிலையில், மணமகளின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்படி, டிசம்பர் 4, 2022 இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு, மணமகள் வீட்டார் சார்பில் இருந்து ”கோத் பாராய்” விழாவும் 60,000 செலவில் நடத்தப்பட்டது. மேலும் இதில் மணமகனுக்கு 15.000 மதிப்புள்ள தங்க மோதிரமும் போடப்பட்டுள்ளது.


ஆனால் தற்போது மணமகனின் வீட்டார் கூடுதல் வரதட்சணை எதிர்பார்ப்பதுடன், அவற்றை தன்னால் தர முடியாத நிலையில், அதற்கு பல்வேறு காரணங்கள் கூறி திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதாக மணமகளின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இரு குடும்பத்தினருக்கும் அறிவுரை கூறி வழக்கை தீர்க்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post