5 மாத கர்ப்பிணிப் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த உறவினர்!! குற்றவாளியின் மனைவியும் உடந்தை!!

ஒடிசாவில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒடிசா மாநிலத்திலுள்ள நபராங்பூர் எனும் பகுதியில் வசிக்கும் 5 மாத கர்ப்பிணி பெண் தனது கணவர் விட்டில் இல்லாததால் அவரது உறவினரான பத்மா என்பவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு உதவிக் கேட்டுள்ளார்.

உடனே பத்மா தனது கணவர் லிலியா ருஞ்சிகர் என்பவரிடம் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். லிலியா கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உள்ள அவரது வீட்டில் பெண்ணை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அப்போது அவருடன் இருந்த பத்மாவிடம் தன்னை காப்பாற்றும் படி கர்ப்பிணிப் பெண் கெஞ்சியுள்ளார். ஆனால் பத்மா தனது போனில் கணவர் துஷ்பிரயோகம் செய்வதை வீடியோ எடுத்துள்ளார்.

அதன் பின் அந்த பெண்ணை அவரது வீட்டில் விட்டு விட்டு நடந்ததை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்கள். இதனை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் தற்கொலை முயற்சி செய்திருக்கிறாள்

அப்பெண்ணைத் தற்கொலையிலிருந்து மீட்ட அவரது உறவினர்கள் விசாரிக்கையில் தனக்கு நடந்த அநீதியை அவர்களிடம் கூறியுள்ளார். இதன்பின் கர்ப்பிணி பெண்ணை ஷாடிகூடா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற உறவினர்கள் இருவரும் மீதும் புகாரளித்துள்ளனர்.

உடனே காவல்துறை லிலியா மற்றும் பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் நீதிமன்றம் அவர்களது பெயில் மனுவை ரத்து செய்து வழக்கைப் பற்றிக் கூடுதலாக விசாரணை செய்து வருகிறது.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post