யாழில் பச்சிளம் குழந்தை மரணம்!!

யாழ். வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று போதிய போசாக்கின்மை காரணத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 13ஆம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.

போதிய போசாக்கின்மை காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் அந்தரித்துவரும் நிலையில், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தை பிரசவித்த தாய்மார்கள், குழந்தைகளின் போசாக்கு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாய தேவை இதன் மூலம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post