தொழிற்சங்க நடவடிக்கை!! பாடசாலைக்கு வராத ஆசிரியர்களுக்கு சிக்கல்!!

தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குகொண்ட ஆசிரியர்களிடம் யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்று விளக்கக் கடிதம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசின் வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் புதன்கிழமை நாடாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த பணிப்பகிஸ்கரிப்பில் 47 க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்றின.

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களிடம் அன்றையதினம் பாடசாலைக்கு சமூகமளிக்காமை தொடர்பாக யாழ். புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விளக்கக் கடிதம் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post