பலாப்பழத்துடன் இந்த பொருட்களை உட்கொள்ளவே கூடாதாம்!!

பலாப்பழத்துடன் சில பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அசைவம் சாப்பிடாமல், சைவ உணவை மட்டுமே உண்பவர்களுக்கு விருப்பமான பலாப்பழத்தின் சுவை மிகவும் அற்புதமானது. பலாப்பழத்தை உட்கொள்வது மிகவும் ஆரோக்கியமானது.


கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து, வைட்டமின்கள் (வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்றவை), தாதுக்கள் (பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவை) மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் கொண்ட பழம் பலாப்பழம்.

கால்சியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன.

உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும் சர்வசஞ்சீவனி என்று அழைக்கப்பட்டாலும் பலாப்பழம் சாப்பிட்ட பிறகு சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவை ஆரோக்கியத்தை மோசமாக்கும். பலாப்பழம் சாப்பிட்ட சில மணி நேரத்திற்கு எந்தெந்த பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துக் கொண்டால் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

பலாப்பழம் பலாப்பழ கொட்டைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவும்.


பலாப்பழம் சாப்பிட்ட பிறகு அல்லது பலாப்பழத்துடன் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பலாப்பழத்தில் ஆக்சலேட் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது பப்பாளியில் உள்ள கால்சியத்துடன் வினைபுரிகிறது.

இதன் காரணமாக எலும்புகள் பலவீனமாகும் என்பதுடன் வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடுவதால் உடல்நலம் சீர்கெடும். பலாப்பழத்தில் உள்ள ஆக்சலேட் வெற்றிலையுடன் வினைபுரிகிறது.

அதன் எதிரொலி வயிற்றில் வலி உண்டாகலாம் அல்லது ஃபுட் பாய்சன் ஏற்படலாம். எனவே பலாப்பழம் சாப்பிட்டு 2 முதல் 3 மணி நேரம் வரை வெற்றிலை உண்பதை தவிர்க்க வேண்டும்.

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு, வெண்டைக்காய் உண்பது ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கும்.

வெண்டைக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தின் உள்ள ஆக்சலேட்டுகளுடன் வினைபுரிகின்றன.

இதன் காரணமாக சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பலாப்பழம் மற்றும் வெண்டைக்காயை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பலாப்பழம் சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது சருமத்தில் வெள்ளை புள்ளிகள், வயிற்று பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும்.

எனவே பலாப்பழம் மற்றும் பாலை ஒரே சமயத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் காணப்படுகின்றன.

ஆனால், மருந்தாக செயல்படும் நல்ல விஷயமே நமது ஆரோக்கியத்தைக் கெடுத்துவிடும் வேலையையும் செய்துவிடும் என்பதால் உணவுகளை பற்றிய அடிப்படை விஷயங்களைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

0/உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Previous Post Next Post